Images
  • Maggots in Egg (1)
    (படம்: Tang WS/Facebook) 

தெம்பனீஸ் Giant பேரங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முட்டை தட்டுகளில் புழுக்கள்

தெம்பனீஸிலுள்ள Giant பேரங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முட்டை தட்டுகளில் புழுக்கள் இருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பேரங்காடி பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட முட்டை தட்டுகள் உடனடியாக அகற்றப்பட்டன என்று பேரங்காடி சென்னல் நியூஸ் ஏஷியாவிடம் தெரிவித்துள்ளது.

அதன் பின், தீவு முழுவதும் இருக்கும் Giant பேரங்காடிகளில், சோதனை நடத்தப்பட்டதாகவும் அது கூறியது.

சோதனைக்குப்பின், பாதிக்கப்பட்ட வரிசையின் மற்ற தட்டுகளில் உள்ள முட்டைகள் சாப்பிடுவதற்குப் பாதுகாப்பானவை என்று பேரங்காடி உறுதிக் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட முட்டை தட்டுகளிலிருந்த முட்டைகள் நொறுங்கியதால் அந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று பேரங்காடியின் பேச்சாளர் கூறினார்.

அது போன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக Giant பேரங்காடி கூறியது.

வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் அந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளது.



 

Top