Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வரலாறு, கற்பனை, தமிழ் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் 'மாகோ சவால்' நிகழ்ச்சி

தமிழ் மொழியையும் அதன் மரபுடைமை குறித்த தகவல்களையும் பற்றி தொடக்கப்பள்ளி மாணவர்கள் மேலும் புரிந்துகொள்ள இரண்டு நாள் பயிலரங்கிற்கு AKT International குழு ஏற்பாடு செய்துள்ளது.

வாசிப்புநேரம் -

தமிழ் மொழியையும் அதன் மரபுடைமை குறித்த தகவல்களையும் பற்றி தொடக்கப்பள்ளி மாணவர்கள் மேலும் புரிந்துகொள்ள இரண்டு நாள் பயிலரங்கிற்கு AKT International குழு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ் மொழி 2021இன் ஓர் அங்கமாக இன்று தொடங்குகிறது "மாகோ சவால்".

இணையம்வழி நடத்தப்படும் பயிலரங்கில் மேடை, பாரம்பரியக் கலை குறித்த அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கதை வடிவத்தில் மாணவர்களைச் சவால்களில் ஈடுபடுத்தவிருப்பதாகச் சொன்னார் AKT குழுவின் நிறுவனர் நாகராணி.

"வரலாறு, கற்பனை, வீரம், தமிழ் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சிதான் இது. வரலாற்றில் இடம்பெற்ற வீரமங்கை குயிலி போன்ற பெண் போராளிகளைக் கதாபாத்திரங்களாக மாணவர்களுக்கு அறிமுகம் செய்துள்ளோம்."

என்றார் அவர்.

வகுப்பறைக்கு அப்பால் அன்றாட நடவடிக்கைகளின்போதும் மாணவர்களைத் தமிழில் உரையாட ஊக்குவிப்பது பட்டறையின் நோக்கம்.

இன்று மாலை 5 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சி 6.30 மணி வரை நீடிக்கும்.

பயிலரங்கு, இரண்டாம் நாளாக, வரும் சனிக்கிழமை நடைபெறும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்