Images
  • Mahathir in SG (1)
    (படம்: AFP/Lillian Suwanrumpha)

பிரதமர் லீயின் அழைப்பையேற்று சிங்கப்பூருக்கு வருகிறார் மலேசியப் பிரதமர் மகாதீர்

பிரதமர் லீ சியென் லூங்கின் அழைப்புக்கு இணங்கி மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது சிங்கப்பூருக்கு வருகிறார்.

நவம்பர் 12, 13 ஆம் தேதிகளில் டாக்டர் மகாதீர் சிங்கப்பூரில் இருப்பார் என்று வெளியுறவு அமைச்சு இன்று (நவம்பர் 10) கூறியது.

டாக்டர் மகாதீருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பளிக்கப்படும்.

டாக்டர் மகாதீர், அவர் மனைவி சிட்டி ஹஸ்மா முகமது அலி (Siti Hasmah Mohd Ali) ஆகியோருக்குப் பிரதமர் லீ மதிய விருந்தளிப்பார். அதைத் தொடர்ந்து ஆர்க்கிட் மலருக்குப் பெயரிடப்படும்.

டாக்டர் மகாதீருடன், மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா உட்பட மூத்த அதிகாரிகளும் சிங்கப்பூருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Top