Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிட்டத்தட்ட 100 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பணிப்பெண்

முதலாளியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பணிப்பெண், அவரைக் கிட்டத்தட்ட 100 முறை கத்தியால் குத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கிட்டத்தட்ட 100 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பணிப்பெண்

(படம்: TODAY/Robin Choo)

முதலாளியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பணிப்பெண், அவரைக் கிட்டத்தட்ட 100 முறை கத்தியால் குத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டில் தெலொக் குராவில் வசித்து வந்த 59 வயதான முதலாளி திருவாட்டி சியௌ கிம் சூவை, 26 வயது இந்தோனேசியப் பணிப்பெண் தர்யாத்தி கொலை செய்வதற்குப் பல வாரங்களாய்த் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.

அந்தக் கொலைத் திட்டங்களின் விவரங்களை, அவர் தம்முடைய நாட்குறிப்பில் குறித்து வைத்ததாக, இன்றைய விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

வேலை செய்த இரண்டே மாதங்களில் நாடு திரும்பவும், ஹாங்காங்கிலுள்ள தமது காதலரைச் சந்திக்கவும் தர்யாத்தி விரும்பினார்.

அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக முதலாளியிடமிருந்த தமது கடப்பிதழைப் பெறவும், பணத்தைத் திருடவும் அவர் திட்டம் தீட்டினார்.

திருவாட்டி சியௌ தனியாக இருக்கும்போது அவரைக் கத்திமுனையில் மிரட்டிய தர்யாத்தி கழிப்பறைக்குள் அவரை இழுத்துச் சென்றார்.

அங்கே முகம், கழுத்து, தலை ஆகிய இடங்களில் திருவாட்டி சியௌ தாக்கப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தர்யத்திக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

விசாரணை நாளையும் தொடரும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்