Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மியன்மார் பணிப்பெண்ணைச் சித்ரவதை செய்த சிங்கப்பூர்ப் பெண்

சிங்கப்பூர்ப் பெண் ஒருவர், மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண்ணைச் சித்ரவதை செய்ததாக இன்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மியன்மார் பணிப்பெண்ணைச் சித்ரவதை செய்த சிங்கப்பூர்ப் பெண்

(படம்: Jeremy Long)

சிங்கப்பூர்ப் பெண் ஒருவர், மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண்ணைச் சித்ரவதை செய்ததாக இன்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஃபியு ஃபியு மார் (Phyu Phyu Mar) என்ற அந்தப் பணிப்பெண் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

அவர் அப்போது சிங்கப்பூர்த் தம்பதியின் வீட்டில் வேலை செய்து வந்தார்.

மனைவி லிண்டா சியா மீது 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

வெந்நீரை உடல் மீது ஊற்றிக்கொள்வது, தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருள் கொண்ட தண்ணீரைக் குடிப்பது உள்ளிட்ட பலவற்றைச் செய்ய சியா, பணிப்பெண்ணைக் கட்டாயப்படுத்தினார்.

மேலும் ஃபியு ஃபியுவின் தலைமுடியைப் பிடித்து இழுத்ததோடு, அவருடைய நெற்றியில் கைபேசியால் சியா அடித்திருக்கிறார்.

சியாவின் கணவர் 44 வயது லிம் டூன் லெங் (Lim Toon Leng), பணிப்பெண்ணை நெற்றியில் குத்திய ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்கினார்.

இருவரும் குற்றம் புரிந்ததாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு பிப்ரவரி 11ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்