Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதலாளியைக் கத்தியால் தாக்கிய சந்தேகத்தின்பேரில் இல்லப் பணிப்பெண் கைது

முதலாளியைக் கத்தியால் தாக்கிய சந்தேகத்தின்பேரில் 34 வயது இல்லப் பணிப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் காமன்வெல்த் கிலோஸ் (Commonwealth Close) அருகே நடந்தது.

வாசிப்புநேரம் -
முதலாளியைக் கத்தியால் தாக்கிய சந்தேகத்தின்பேரில் இல்லப் பணிப்பெண் கைது

கோப்புப்படம்: Jeremy Long

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

முதலாளியைக் கத்தியால் தாக்கிய சந்தேகத்தின்பேரில் 34 வயது இல்லப் பணிப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் காமன்வெல்த் கிலோஸ் (Commonwealth Close) அருகே நடந்தது.

அதிகாரிகள் CCTV கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியைப் பார்வையிட்டனர்.

அவர்கள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து அந்த நபர் சாங்கி விமான நிலையத்தின் முதலாம் முனையத்தில் கைதுசெய்யப்பட்டார்.

ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதன் தொடர்பில் அவர்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனையோ 15 ஆண்டு வரை சிறைத்தண்டனையோ அபராதமோ அல்லது பிரம்படியோ விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்