Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையக் குழுமத் தலைவர் வீட்டில் திருட்டு- பணிப்பெண் குற்றவாளி எனத் தீர்ப்பு

சாங்கி விமான நிலையக் குழுமத் தலைவர் வீட்டிலிருந்து திருடியது தொடர்பான வழக்கில், இந்தோனேசியப் பணிப்பெண் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையக் குழுமத் தலைவர் வீட்டில் திருட்டு- பணிப்பெண் குற்றவாளி எனத் தீர்ப்பு

(படம்: TODAY)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சாங்கி விமான நிலையக் குழுமத் தலைவர் வீட்டிலிருந்து திருடியது தொடர்பான வழக்கில், இந்தோனேசியப் பணிப்பெண் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பணிப்பெண் மீது 30,000 வெள்ளிக்கும் அதிகமான மதிப்புடைய பொருள்களைக் களவாடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

45 வயது பார்டி லியானியிடம் (Parti Liyani) மொத்தம் 19 நாள் விசாரணை நடத்தப்பட்டது.

சில மாதங்களாக இடம்பெற்ற விசாரணையின் முடிவில், அவர் பல்வேறு பொருள்களைத் திருடியது உறுதியானது.

2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2016 அக்டோபர் மாதம் வரை அவர் திரு. லியூ முன் லியொங்கின் (Liew Mun Leong) இல்லத்தில் வேலைசெய்தார்.

அப்போது, ஆடம்பரக் கைப்பைகள், நூற்றுக்கணக்கான ஆடைகள், நகை, பை போன்றவற்றை பார்டி திருடியதாக, 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 7 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

வரும் திங்கட்கிழமை தண்டனை விதிக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்