Images
  • மைட்ச்

Carousell இணையத்தளத்தில் 'விற்பனை' செய்யப்படும் இல்லப் பணிப்பெண்கள்

சிங்கப்பூர்: Carousell இணையத்தளத்தில் இல்லப் பணிப்பெண்களைத் தவறுதலாக விளம்பரப் படுத்துவது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த விளம்பரங்களை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு அதன் Facebook பக்கத்தில் குறிப்பிட்டது.


இந்தோனேசிய இல்லப் பணிப்பெண்களின் பெயர்கள், அவர்களின் வயது போன்றவற்றைக் குறிப்பிட்டு maid.recruitment என்ற புனைப்பெயரில் இயங்கும் பயனீட்டாளர் அவர்களை விளம்பரம் செய்து வந்தார்.

தற்போது அந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இல்லப் பணிப்பெண்களைப் பொருள்கள் போல விளம்பரம் செய்வது வேலை முகவர் நிறுவனச் சட்டத்திற்கு புறம்பானது.

அத்தகைய செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உரிமங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்துசெய்யப்படலாம். அவர்களுக்கு அதிகபட்சமாக 80,000 வெள்ளி அபராதத்துடன் ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

உரிமம் இல்லாத வேலை முகவர் நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்துவோருக்கும் 5,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம். 

Top