Images
  • jb bridge
    ( படம்: AFP )

வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் மலேசிய ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வருமுன் மனிதவள அமைச்சின் ஒப்புதலைப் பெறவேண்டும்

வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் மலேசிய ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வருமுன் மனிதவள அமைச்சின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது உடனடியாக நடப்புக்கு வருகிறது.

நிலம், ஆகாயம், கடல் வழிப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு வரும் மலேசிய ஊழியர்கள் அனைவருக்கும் அது பொருந்தும்.

தற்போது வேலை அனுமதி அட்டை வைத்திருப்போருடன், நிபந்தனையுடன் அதற்கான ஒப்புதல் பெற்றிருப்போருக்கும் அதனைப் பின்பற்றவேண்டியது அவசியம்.

மனிதவள அமைச்சின் ஒப்புதைலைப் பெற பாதிக்கப்பட்ட ஊழியர்களின் முதலாளிகள் இணையம் வழி விண்ணப்பம் செய்யவேண்டும்.

சிங்கப்பூருக்கு வந்தவுடன் அவர்களுக்கு வீட்டிலேயே தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யும் ஊழியர்களுக்குப் புதிய நடைமுறை பொருந்தாது.


Top