Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தருவிக்கப்படும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தருவிக்கப்படும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது

வாசிப்புநேரம் -
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தருவிக்கப்படும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது

(படம்: Reuters)

மலேசியாவிலிருந்து தருவிக்கப்படும் காய்கறிகளின் விலை, சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களாய்க் கடுமையாக உயர்ந்துள்ளது.

பருவமழை காரணமாக மலேசியாவில் காய்கறி விளைச்சலும், விநியோகமும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

காய்கறிகள் சிலவற்றின் விலை பத்தாண்டுகளில் காணாத அளவு அதிகரித்துள்ளது.

முன்னெப்போதும் இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை.

சில காய்கறிகளைக் கையிருப்பில் வைத்திருக்கக் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருப்பதாய் வியாபாரிகள் கூறினர்.

மலேசியாவில் இரண்டு வாரம் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அது காய்கறி விநியோகத்திலும், விலையிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்கின்றனர் இறக்குமதியாளர்கள்.

சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய,170-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இங்கு உணவுப் பொருள்கள் தருவிக்கப்படுகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்