Images
  • mahathir fb
    (படம்:AFP/Feline Lim)

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நிலவும் போட்டித்தன்மை விரைவாக வளர்ச்சி காண உதவும் : மலேசியப் பிரதமர் மகாதீர்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நிலவும் போட்டித்தன்மை விரைவாக வளர்ச்சி காண உதவும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.

டாக்டர் மகாதீர் தமது Facebook பதிவில் மலேசியாவும் சிங்கப்பூரும் இரட்டைப் பிள்ளைகள் என்றும், மூத்த பிள்ளை இரண்டாவது பிள்ளைவிட சற்றுப் பெரியது என்பது மட்டுமே வேறுபாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சென்ற மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின்போது தம்மை வரவேற்ற பிரதமர் லீ சியென் லூங்கிற்கு டாக்டர் மகாதீர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

துவாஸுக்கு அருகே சிங்கப்பூர் அதன் துறைமுக எல்லைகளை விரிவுபடுத்தியிருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கூறியவேளையில் டாக்டர் மகாதீரின் Facebook பதிவு வெளியானது.

சிங்கப்பூரின் எல்லைக்குள் மலேசியா அத்துமீறவில்லை என்று டாக்டர் மகாதீர் நேற்றுமுன் தினம் கூறியிருந்தார்.

இருநாட்டுக்கிடையே ஜொகூரின் தென்பகுதி ஆகாயவெளி தொடர்பான சர்ச்சையும் நிலவுகிறது.  

Top