Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென் ஜொகூர் ஆகாயவெளி ஏற்பாடுகளை மாற்ற மலேசியா தொழில்நுட்ப ரீதியான காரணத்தை முன்வைப்பதாகத் தோன்றுகிறது: அமைச்சர் காவ்

தென் ஜொகூர் ஆகாயவெளி நிர்வாக ஏற்பாடுகளை மாற்ற மலேசியா தொழில்நுட்ப ரீதியான காரணத்தை முன்வைப்பதாய்த் தோன்றுவதாக சிங்கப்பூர்ப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் இன்று (டிச 12) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
தென் ஜொகூர் ஆகாயவெளி ஏற்பாடுகளை மாற்ற மலேசியா தொழில்நுட்ப ரீதியான காரணத்தை முன்வைப்பதாகத் தோன்றுகிறது: அமைச்சர் காவ்

(TODAY கோப்புப் படம்)

தென் ஜொகூர் ஆகாயவெளி நிர்வாக ஏற்பாடுகளை மாற்ற மலேசியா தொழில்நுட்ப ரீதியான காரணத்தை முன்வைப்பதாய்த் தோன்றுவதாக சிங்கப்பூர்ப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் இன்று (டிச 12) தெரிவித்துள்ளார்.

அரசுரிமை, தேசிய நலன் ஆகியவற்றின் அடிப்படையில், தென் ஜொகூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஆகாயவெளியை மீட்டுக் கொள்ள விரும்புவதாக, மலேசியா கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது.

அதே நேரத்தில், சிலேத்தார் விமானநிலையத்தில் Instrument Landing System எனப்படும் விமானத்தைத் தரையிறக்கும் புதிய முறையை சிங்கப்பூர் அறிமுகப்படுத்துவது குறித்தும் மலேசியா தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.

ஜொகூரில் உள்ள பாசிர் குடாங் பகுதியில் உயரமான கட்டடங்கள் கட்டப்படுவதை, அந்தமுறை கட்டுப்படுத்தும் என்று மலேசியா கூறியது.

விமானத்தைத் தரையிறக்குவதற்கான புதிய முறையை எதிர்ப்பதற்கு உண்மையாகவே தொழில்நுட்ப ரீதியான காரணம் இருந்தால், நல்லெண்ண அடிப்படையில் இருதரப்புக்கும் ஏற்புடைய தீர்வை எட்டுவது சாத்தியமே !...

ஆனால், 1973இல் தீர்மானிக்கப்பட்ட ஆகாயவெளி நிர்வாக ஏற்பாட்டை மாற்றுவதற்கு அதை ஒரு காரணமாக முன்வைப்பது போன்ற சூழல் தென்படுவதாகத் திரு. காவ் கூறினார்.

அந்த ஆகாயவெளி நிர்வாக ஏற்பாடு மிக நல்ல முறையில் செயல்பட்டு வந்திருப்பதாகச் சொன்ன அவர், சம்பந்தப்பட்ட வட்டாரப் பங்காளிகள் அனைவருக்குமே அது பலனளித்திருப்பதாகவும் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்