Images
  • port
    படம்: AFP / ROSLAN RAHMAN

அனைத்துலகச் சட்டத்துக்கேற்ப ஊடுருவலை மலேசியா நிறுத்தவேண்டும் - அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்

மலேசியா, அனைத்துலகச் சட்டத்துக்கேற்ப ஊடுருவலை நிறுத்தவேண்டும் என்றும், பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ஜொகூர் பாரு துறைமுக எல்லை விரிவாக்கம் குறித்து, மலேசிய வெளியுறவு அமைச்ச சைஃபுடீன் அப்துல்லாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.

அது துவாஸுக்கு அருகே,சிங்கப்பூரின் நீர்ப் பகுதியில் அத்துமீறி நுழைவதாக அமையும் என்று டாக்டர் பாலகிருஷ்ணன்  விளக்கினார்.

சிங்கப்பூர் ஆட்சேபம் தெரிவித்ததைப் பொருட்படுத்தாமல், மலேசியக் கப்பல்கள் துவாஸ் அருகே சிங்கப்பூர் நீர்ப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறி நுழைந்ததாக அவர் கூறினார்.

சிங்கப்பூரும், மலேசியாவும் தொடர்ந்து அந்த விவாகாரம் தொடர்பில் ஆக்ககரமான பேச்சு நடத்தவேண்டும்; நெருங்கிய அண்டை நாடுகளான அவை சுமுகமான இருதரப்பு உறவைக் கொண்டிருப்பதும், அனைத்துலகச் சட்டத்தை மதித்து நடப்பதும் முக்கியம் என்று அமைச்சர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.


Top