Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலேசியக் காய்கறி, பழங்களை உரிமமின்றி இறக்குமதி செய்த நிறுவனத்துக்கு $6000 அபராதம்

சட்டவிரோதமாக உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு 10,000 வெள்ளிவரை அபராதமும் மூவாண்டுவரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

வாசிப்புநேரம் -


மலேசியாவிலிருந்து காய்கறிகளையும் பழங்களையும் முறையான உரிமமின்றி இறக்குமதி செய்ததற்காக TCM Fruits and Vegetables எனும் நிறுவனத்துக்கு 6,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டு லாரிகளில் சுமார் 1.17 டன் காய்கறிகளும் பழங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகுறித்து முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் கூறியது.

சட்டத்துக்குப் புறம்பாக சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்து அழித்ததாக ஆணையம் தெரிவித்தது.

உரிமமின்றி கொண்டுவரப்படும் உணவுப் பொருட்களால் உணவுப் பாதுகாப்பிற்குப் பங்கம் ஏற்படலாம் என்றும் அது சொன்னது.

சட்டவிரோதமாக உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு 10,000 வெள்ளிவரை அபராதமும் மூவாண்டுவரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்