Images
  • car

சிங்கப்பூரில் உள்ள மலேசிய வாகனங்களுக்கான அனுமதி அட்டையின் காலம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் உள்ள மலேசிய வாகனங்களுக்கு VEP எனும் அனுமதி அட்டையின் காலம் ஜூன் 30 வது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் வாகனங்கள் Vehicle Entry Permit எனும் அனுமதி அட்டை வைத்திருக்க வேண்டும்.

மலேசியா COVID-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதனால் அந்நாட்டு ஊழியர்கள் பலர் சிங்கப்பூரிலேயே தங்கிப் பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து ஊழியர்களின் வாகனங்களுக்கான VEP அட்டை அனுமதிக் காலத்தை நீட்டிப்பதாக நிலப் போக்குவரவு ஆணையம் தெரிவித்தது.

அட்டையில் போதிய ரொக்கம் இருக்க வேண்டும் என்றும், சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் போதும் சுங்கச்சாவடி, ERP போன்ற சேவைகளுக்கு அது உதவும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.


 

Top