Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்க் கடல்பகுதியில் மலேசியக் கப்பலும் கிரீஸ் கப்பலும் மோதல்

சிங்கப்பூர்க் கடல்பகுதியில் இன்று மதியம் மலேசியக் கப்பலும் கிரீஸ் கப்பலும் மோதின.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்க் கடல்பகுதியில் மலேசியக் கப்பலும் கிரீஸ் கப்பலும் மோதல்

படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

 

சிங்கப்பூர்க் கடல்பகுதியில் இன்று மதியம் மலேசியக் கப்பலும் கிரீஸ் கப்பலும் மோதின.

சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் அந்தத் தகவலை வெளியிட்டது.

இன்று மதியம் இரண்டரை மணியளவில் துவாஸை ஒட்டிய சிங்கப்பூர்க் கடல்பகுதியில் கிரீஸ் கப்பல் பிரியாஸும்  மலேசியக் கப்பல் பொலாரிஸும்  மோதின.

கிரீஸ் கப்பல் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் தஞ்சோங் பெலாப்பாஸ் (Tanjung Pelapas) துறைமுகத்துக்குச் சென்றுகொண்டிருந்த வழியில் மோதல் நடந்தது.

  சிங்கப்பூர்க் கடல்பகுதியில் கப்பல்களின் அத்துமீறிய நடமாட்டம் குறித்து ஆணையம் ஆழ்ந்த கவலை தெரிவித்தது.

அத்தகைய செயல் அனைத்துலகக் கப்பல் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, கப்பல்கள் செல்லும் பாதையில் இடையூறாக விளங்கக்கூடும் என்று அது குறிப்பிட்டது.

மோதல் குறித்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்