Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊழியர் தற்கொலை - முன்னாள் முதலாளியிடம் விசாரணை நடத்தும் மனிதவள அமைச்சு

ஊழியர் தற்கொலை - முன்னாள் முதலாளியிடம் விசாரணை நடத்தும் மனிதவள அமைச்சு

வாசிப்புநேரம் -
ஊழியர் தற்கொலை - முன்னாள் முதலாளியிடம் விசாரணை நடத்தும் மனிதவள அமைச்சு

(படம்: Calvin Oh)

ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக முன்னாள் முதலாளியிடம் மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.

வேலையிடத்தில் அதிகச் சிரமங்களை எதிர் நோக்கியதால் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த மலேசியப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக Facebook தளத்தில் விவரங்கள் வெளியாகின.

அதைத்தொடர்ந்து அந்தப் பதிவு
குறித்து அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக அவருடன் வேலை பார்த்த மற்றோர் ஊழியர் Facebook இல் தகவல் வெளியிட்டார்.

தற்கொலை செய்துகொண்ட பெண்ணை, நிறுவனத் தலைவர் அடிக்கடி அவமானப்படுத்தித் துன்புறுத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விற்பனை இலக்குகளை எட்டாததால் நிறுவனம் பெண்ணைப் பணியிலிருந்து நீக்கியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலைக்கு முன்னர் அந்தப் பெண் தம்முடைய தாய்க்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளார்.

அதில் நிறுவனத்தின் தவறான நடைமுறைகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

நிறுவனம் தொடர்பாகப் பெண் எந்த புகாரும் கொடுக்கவில்லை என்று மனிதவள அமைச்சு கூறியது.

ஆனால் தற்போது அவரின் தாயார் அமைச்சிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து அமைச்சு விசாரணை நடந்தி வருகிறது.

குற்றச்சாட்டுகளை நிறுவனம் மறுத்துள்ளது.

தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் நிறுவனத்தின் தலைவர் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்