Images
  • value pax
    படம்: Cindy Co

வெட்டுக் கத்தியுடன் அடகுக் கடையில் திருட முயன்ற ஆடவர்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பிடோக் நார்த் ஸ்ட்ரீட் 1, புளோக் 213இல் அமைந்துள்ள ValueMax அடகுக்கடையில் ஆடவர் ஒருவர் திருட முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆடவர் கையில் பெரிய வெட்டுக் கத்தி வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் அந்தச் சம்பவம் நடந்ததாக அடகுக்கடை நிர்வாகி சூ தெரிவித்தார்.

முகமூடி அணிந்தவாறு, பெரிய வெட்டுக் கத்தியுடன் அந்த ஆடவர் கடைக்குள் நுழைந்ததாக நிர்வாகி கூறினார்.

வெட்டுக் கத்தியைக் கடையிலிருந்த கண்ணாடி மீது அந்த ஆடவர் மோதியபோது, எதிர்பாரா விதமாக அது இரண்டாய் உடைந்தது.

உடனே அந்த ஆடவர், உடைந்த கத்தியை எடுத்துக்கொண்டு தப்பியோடினார்.

தப்பியோடிய ஆடவருக்கு சுமார் 40 வயது இருக்கும் என்றார் நிர்வாகி.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.


Top