Images
  • Scams Arrest
    (கோப்புப் படம்: CNA)

தலைக் கவசத்தால் டாக்ஸியைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் ஆடவர் கைது

சிங்கப்பூரில், தலைக் கவசத்தால் டாக்ஸியைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின்போது டாக்ஸிக்குள் ஒரு குழந்தை உட்பட பயணிகளும் இருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (10 அக்டோபர்) மாலை சுமார் 6 மணியளவில், சுவா சூ காங்கில் உள்ள கியெட் ஹோங் குளோஸில் (Keat Hong Close) உள்ள புளோக் 804Bக்கு அருகில் ஒரு டாக்ஸியை அந்த ஆடவர் தாக்கியதாகக் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது.

போக்குவரத்துச் சர்ச்சையில் அவரும் டாக்ஸி ஓட்டுநரும் ஈடுபட்டிருந்ததாக முதற்கட்டப் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

அதையடுத்து, அந்த ஆடவர், தம் மோட்டார்சைக்கிள் தலைக் கவசத்தைக் கொண்டு டாக்ஸியைச் சேதப்படுத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவரது செயல், காணொளி ஒன்றில் பதிவானது. அந்தக் காணொளி இணையத்தில் பதிவேற்றப்பட்டு, பரவிவருகிறது.

காவல்துறையின் மேற்கொண்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து ஆடவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.  

Top