Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Hotel 81இல் துண்டுகளுக்குத் தீவைத்த ஆடவருக்கு 3 மாதச் சிறைத் தண்டனை

Hotel 81இல் துண்டுகளுக்குத் தீவைத்த ஆடவருக்கு, 3 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

Hotel 81இல் துண்டுகளுக்குத் தீவைத்த ஆடவருக்கு, 3 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஓர் அறையில் இருவரை மட்டுமே அனுமதிக்க முடியும் என ஹோட்டலின் ஊழியர்கள் கூறியதைத் தொடர்ந்து, 34 வயது லோய் ஷெங் ஷியுன் (Lau Sheng Shiun) எரியும் சிகரெட் துண்டைக் கொண்டு லாவண்டர் ஸ்ட்ரீட்டில் உள்ள ஹோட்டலில் நான்கு துண்டுகளுக்குத் தீவைத்தார்.

2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சம்பவத்துக்காக, மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சுவா வென் ஹாய்வுடன் (Chua Wen Hao) லோய், மதுபானம் அருந்தச் சென்றுள்ளார்.

மதுபானக் கூடத்தில் சந்தித்த வியட்நாமியப் பெண்ணுடன், அவர்கள் ஹோட்டல் 81உக்குச் சென்றிருக்கின்றனர்.

முதலில் சுவா, அந்தப் பெண்ணுடன் ஹோட்டல் அறைக்குச் சென்றார்.

பின்னர் அறைக்குச் சென்ற லோயிடம் ஹோட்டல் ஊழியர், இருவர் மட்டுமே தங்கக்கூடிய விதிமுறைபற்றிக் கூறி அங்கிருந்து கிளம்பச் சொல்லியிருக்கிறார்.

ஹோட்டலின் பின்வாசல் வழியே சென்ற லோய், சிகரெட் பிடிக்கும்போது அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த துண்டுகள் சிலவற்றுக்குத் தீ வைத்தார்.

அவ்வழியே சென்ற வழிப்போக்கர் தீப்பற்றி எரிவதைக் கண்டு, ஹோட்டல் ஊழியர்களிடம் இரவு மணி 9.50 அளவில் தகவல் கொடுத்தார்.

அந்தச் சம்பவத்தால், ஹோட்டலுக்குச் சுமார் $60 நட்டம்.

அதிக மதுபானம் அருந்தியதால் என்ன நடந்தது என்பது தெளிவாக நினைவில் இல்லை என்று லோய் நீதிமன்றத்தில் சொன்னார்.

மூவர் தங்கத் தேவையான அறை இல்லை என்று கேள்விப்பட்டதும் விரக்தியில் துண்டுகளுக்குத் தீ வைத்ததாகச் சொன்னார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்