Images
  • gavel

ஒரு தலையாய் காதலித்த பெண்ணைக் கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்டதாக ஆடவர்மீது சந்தேகம்

ஒரு தலையாய் காதலித்த பெண்ணைப், பொறாமையின் காரணமாகக் கொன்று அவரின் சடலத்துடன் உடலுறவு கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் மீதான வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.

மூவாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில் 51 வயது போ சூன் ஹோ (Boh Soon Ho), அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று கொன்றதாக நம்பப்படுகிறது.

28 வயது பெண், மற்ற ஆண்களுடன் தொடர்பில் இருந்தது போவிற்குப் பிடிக்கவில்லை.

பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அவரைத் குளிக்கும் துண்டு ஒன்றை வைத்து கழுத்தை நெறித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

பெண்ணிண் சடலத்தைப் படமெடுத்த பின்னர் அதனுடன் உடலுறவு கொள்ள முயன்றதாகவும் கூறப்பட்டது.

சம்பவத்துக்குப் பின் ஆடவர், பெண்ணின் கைபேசி, பணத்தை எடுத்துக்கொண்டு, மலேசியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது.

போ தங்கி இருந்த அறையில் பெண்ணின் சடலத்தைக் கண்டுபிடித்தார் வீட்டு உரிமையாளர்.

மலாக்காவில் தலைமறைவாக இருந்த ஆடவரைக் கைது செய்த மலேசிய காவல்துறையினர், அவரை சிங்கப்பூரிடம் ஒப்படைத்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம்.
 

Top