Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மோட்டார் சைக்கிள் திருட்டு : 22 வயது இளைஞர் கைது

மோட்டார் சைக்கிளைத் திருடிய சந்தேகத்தின்பேரில், 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வாசிப்புநேரம் -

மோட்டார் சைக்கிளைத் திருடிய சந்தேகத்தின்பேரில், 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 6ஆம் தேதி, ஹவ்காங் அவென்யூ 1இல் (Hougang Avenue 1) நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனதாகக் காவல்துறைக்குப் புகார் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து விசாரணை மூலம், அங் மோ கியோ காவல்துறைப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர். மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

சந்தேக நபர் மீது, நாளை (15 செப்டம்பர் 2021) நீதிமன்றத்தில், திருட்டுக் குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

மோட்டார் சைக்கிள் திருடு போகாமல் தடுக்க, வாகன உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

  • திருட்டைத் தடுக்கும் எச்சரிக்கை ஒலி அமைப்பை மோட்டார் சைக்கிளில் நிறுவுவது.
  • மோட்டார் சைக்கிளைக் கித்தான் (canvas) வைத்து மூடவும்.
  • பிரேக் பூட்டு (Brake lock) போன்ற மேலும் சில பூட்டும் சாதனங்களைப் பயன்படுத்தவும்
  • மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்திய பிறகு சாவிகளை வெளியே எடுத்துப் பத்திரப்படுத்தவும்.
  • சாவிகளை மோட்டார் சைக்கிள் பெட்டியில் விட்டுச் செல்ல வேண்டாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்