Images
  • Man arrested Mrt (1)

தானா மேரா ரயில் நிலையத் தடத்திற்குள் சென்ற ஆடவர் கைது

தானா மேரா ரயில் நிலையத்தின் தடங்களுக்குள் நுழைந்ததாக நம்பப்படும் ஆடவர் இன்று (நவம்பர் 8) கைது செய்யப்பட்டார்.

சம்பவம் குறித்துக் காலை 11.50 மணிக்குக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

ரயில் நிலையத்தின் பாதுகாப்புக் கதவுகளைக் கடந்து அந்த 30 வயது ஆடவர் தடங்களுக்குள் புகுந்ததாக நம்பப்படுகிறது.

ரயில் நிலைய ஊழியர் ஒருவர் அந்த ஆடவரைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றியதாகக் கூறப்பட்டது.

சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

Top