Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாகப் படகுமூலம் நுழைய முயன்ற ஆடவருக்குச் சிறை

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாகப் படகு வாயிலாக நுழைய முயன்ற 21 வயது ஆடவருக்கு 6 வாரச் சிறைத் தண்டனையும் 4 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாகப் படகுமூலம் நுழைய முயன்ற ஆடவருக்குச் சிறை

( படம்: குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் )

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாகப் படகு வாயிலாக நுழைய முயன்ற 21 வயது ஆடவருக்கு 6 வாரச் சிறைத் தண்டனையும் 4 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

ஏர்பெண்டி (Erpendi) என்று அதிகாரிகளால் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ஆடவர், ஒரு 16 வயது இளையருடன் கைது செய்யப்பட்டாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் இன்று (பிப்ரவரி 20) தெரிவித்தது.

இம்மாதம் பத்தாம் தேதி ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்கு அப்பால், இரவு 10.45 மணிக்கு அந்த இருவரும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அந்த இளையர் மீது விசாரணை மேற்கொள்வதற்குமுன் அவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தபட்சமாக 3 பிரம்படிகளும் விதிக்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்