Images
  • smoking (1)
    படம்: சிங்கப்பூர்ச் சுங்கத்துறை 

தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக ஒரே நாளில் இருமுறை பிடிபட்ட ஆடவர்

தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக, 53 வயது சிங்கப்பூர் ஆடவர், ஒரே நாளில் இருமுறை பிடிபட்டார். அவருக்கு 2,900 வெள்ளி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அவர் இதற்கு முன்னர் அது போன்ற குற்றங்களை 2013ஆம் ஆண்டிலும் 2015ஆம் ஆண்டிலும் புரிந்ததாகச் சிங்கப்பூர்ச் சுங்கத்துறை இன்று (அக்டோபர் 10) தெரிவித்தது.

புக்கிட் மேரா செண்ட்ரலில் அதிகாரிகள் இம்மாதம் 4ஆம் தேதி நடத்திய சோதனையில், அவர் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டைப் புகைத்ததற்காகப் பிடிபட்டார்.

சுமார் 90 நிமிடங்கள் கழித்து, அதிகாரிகள் மீண்டும் அவர் அவ்வாறு செய்வதைப் பார்த்தனர்.

அவர் வீட்டில் மேற்கொண்டு நடத்தப்பட்ட சோதனையில், அதிகாரிகள் தீர்வை செலுத்தப்படாத மூன்று சிகரெட் பொட்டலங்களையும் 10 சிகரெட்டுகளையும் கண்டுபிடித்தனர்.


Top