Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது $232,000 ரொக்கம் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம்

சிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது 232,000 வெள்ளி ரொக்கம் வைத்திருந்த 31 வயது ஆடவருக்கு 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது $232,000 ரொக்கம் வைத்திருந்த ஆடவருக்கு அபராதம்

(படம்: Channel NewsAsia)

சிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது 232,000 வெள்ளி ரொக்கம் வைத்திருந்த 31 வயது ஆடவருக்கு 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆடவர் பல்வேறு நாணயங்களில் 232,000 வெள்ளிக்கு மேற்பட்ட ரொக்கம் வைத்திருந்ததாகவும், அது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

சிங்கப்பூரை விட்டு வெளியேறும்போது பயணிகள் 20,000 வெள்ளிக்கு மேற்பட்ட ரொக்கத்தை அல்லது அதே மதிப்பைக் கொண்ட வெளிநாட்டு நாணயத்தை வைத்திருந்தால் விமான நிலைய அதிகாரிகளிடம் அது பற்றித் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால் 50,000 வெள்ளி வரை அபராதம் அல்லது 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்