Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் குறிப்பிடும் போலிச் சான்றிதழ் ஏற்பாடு செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் குறிப்பிடும் போலிச் சான்றிதழ் ஏற்பாடு செய்ததாக 30 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் குறிப்பிடும் போலிச் சான்றிதழ் ஏற்பாடு செய்ததாக 30 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஸாங் ஷாவ்பெங் (Zhang Shaopeng), ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள உணவு-பானக் கடையில் அமர்ந்து சாப்பிடுவதற்காகப் போலி ஆவணத்தைக் காட்டியதாக நம்பப்படுகிறது.

கடையின் ஊழியர், சான்று போலியாக இருக்கலாம் என்று சந்தேகம் கொண்டதால், ஷாவ்பெங்கை வெளியேறும்படி கூறியிருந்தார்.

ஷாவ்பெங்கும் அதற்கு கட்டுப்பட்டார்.

என்றாலும், காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதால் அந்த ஆடவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

ஷாவ்பெங், இம்மாதம் முதலாம் தேதி அல்லது அதற்கு முன்பு போலி ஆவணத்தைத் தயார்செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

Raffles Medical நிறுவனத்திடமிருந்து கிடைத்த ஆவணத்தில் அவர், தம்முடைய பெயர் குறிப்பிடும் வகையில் மாற்றம் செய்ததாக நம்பப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஷாவ்பெங்கிறகு 4 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

-CNA/ja(gr)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்