Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தலைக்கவசத்தைக் கொண்டு டாக்சியைத் தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

தலைக்கவசத்தைக் கொண்டு டாக்சியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

தலைக்கவசத்தைக் கொண்டு டாக்சியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10 அக்டோபர்) மாலை 6 மணியளவில், கியெட் ஹோங் குளோஸ் (Keat Hong Close) புளோக் 804Bக்கு அருகிலுள்ள துணைச்சாலையில் நடந்தது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என்று நம்பப்படும் 30 வயது ஜோயல் டான் (Joel Tan), டாக்சி ஓட்டுநருடன் போக்குவரத்துப் பிரச்சினையின் தொடர்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

அது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

டான், தனது தலைக்கவசத்தைக் கொண்டு டாக்சியைத் தாக்கியதும், பின்புறக் கண்ணாடித் துடைப்பானை, டாக்சியின் முன் கண்ணாடி மீது எறிந்ததும் காணொளியில் தெரிகிறது.

சம்பவத்தின்போது டாக்சிக்குள் ஒரு குழந்தை உட்பட பயணிகளும் இருந்தனர்.

அவர்கள் காயமடையவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காவல்துறையினர் பின்னர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஆடவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், டானுக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ 2,500 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

டான் ஏற்கெனவே, பொது இடங்களில் முகக்கவசத்தை அணியத் தவறியது, குறும்புச் செயல்களில் ஈடுபட்டதன் தொடர்பில் விசாரிக்கப்பட்டுவருவதாகக் கூறப்பட்டது.

போதைப்பொருள் குற்றங்களின் தொடர்பிலும் டானிடம் விசாரணை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

- CNA/ll(zl)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்