Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தடை செய்யப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் - ஆடவர் மீது குற்றச்சாட்டு

தடை செய்யப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதன் தொடர்பில் 40 வயது ஆடவர் மீது பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
தடை செய்யப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் - ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோப்புப் படம்: Hanidah Amin

தடை செய்யப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதன் தொடர்பில் 40 வயது ஆடவர் மீது பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வாம் குவொக் ஹான் ஜோலோவன் (Wham Kwok Han Jolovan), 2018ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி, முன்னாள் அரச நீதிமன்றக் கட்டடத்துக்கு இட்டுச்செல்லும் படிகளில் ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கூறப்பட்டது.

பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ், 2009ஆம் ஆண்டில், தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இடம் அது.

மேலும், இவ்வாண்டு மார்ச் 28ஆம் தேதி,
தோ பாயோ சென்ட்ரல் சமூக மன்றம், தோ பாயோ அக்கம்பக்கக் காவல் நிலையம் ஆகியவற்றுக்கு அருகில் அந்த ஆடவர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இரு சம்பவங்களின் தொடர்பிலும் நாளை மறுநாள் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

குற்றச் செயல்கள் நிரூபிக்கப்பட்டால் மொத்தம் 10ஆயிரம் வெள்ளி வரை அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

காவல்துறை அனுமதியின்றிப் பொதுக் கூட்டங்களை நடத்துதல், அவற்றில் கலந்துகொள்ளுதல் ஆகியவை பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதப்படும் என்பதைக் காவல்துறை நினைவுறுத்தியது.

சிங்கப்பூரர்கள் சில நிபந்தனைகளின் கீழ், பேச்சாளர் சதுக்கத்தில் கூட்டம் நடத்தவோ, கருத்துகளை வெளிப்படுத்தவோ காவல்துறை அனுமதி தேவையில்லை.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்