Images
  • sg (4)
     (படம்: Screengrab from Google Maps)

கேலாங் ஹோட்டலில் காதலியைக் கொலை செய்ததற்காக மரண தண்டனையை எதிர்நோக்கும் பங்களாதேஷ் ஆடவர் மேல்முறையீடு

கேலாங் ஹோட்டலில் காதலியைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் ஆடவர் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

அகமது சலீம் என்ற அந்த 31 வயது ஆடவர் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Golden Dragon ஹோட்டலில் தனது காதலியான இந்தோனேசியப் பணிப்பெண்ணைக் கொலை செய்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

தனக்காக மற்றோர் ஆடவரிடமிருந்து விலக அந்தப் பெண் மறுத்ததால் அகமது அவரைக் கொலை செய்ததாகக் கூறப்பட்டது.

அகமது அந்தப் பெண்ணைக் கொலை செய்ய நன்கு திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெளிவானதாக உயர் நீதிமன்ற நீதிபதி கூறினார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யவும் கொலைக் குற்றச்சாட்டைக் கட்டாய மரண தண்டனையற்ற ஒன்றாகக் குறைக்கவும் அவரது வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர்.

மேல்முறையீட்டு நீதிமன்றம் அதன் தீர்ப்பைப் பின்னொரு தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

- CNA/ll(gs)

Top