Images
  • crabs
    (படம்: Facebook/House of Seafood)

உணவகத்திலிருந்து உயிர் நண்டுகளைத் திருடிய ஆடவருக்குச் சிறை, அபராதம்

பொங்கோலில் உள்ள ஒரு கடலுணவு விற்கும் உணவகத்திலிருந்து சுமார் 800 வெள்ளி மதிப்பிலான 11 உயிர் நண்டுகளைத் திருடிய ஆடவருக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

60 வயது அப்துல் கரீம் முகமது (Abdul Karim Mohamad), என்ற அந்த ஆடவர் சரியாக முகக்கவசம் அணியாததற்கும் 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

அப்போது, அவருக்கு வேலையில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், அப்துல் கரீமும், அவரது சகோதரரும் House of Seafood உணவகத்தின் பெரிய மீன் தொட்டியைக் கண்டனர்.

அப்துல் கரீம், அதிலிருந்த உயிர் நண்டுகளை எடுத்த பிளாஸ்டிக் பையில் வைத்தார்.

இருவரும் தப்பியோட முயன்றபோது, அவர்கள் உணவக ஊழியர்களிடம் பிடிபட்டனர்.

செங்காங்கில் நேர்மையற்ற முறையில் 2 பை உணவுப் பொருள்களை எடுத்துச் சென்றபோது, அவர் முகக்கவசத்தைச் சரியாக அணியவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது பதிவானது.

அந்தப் பொருள்களை விற்று, உணவு வாங்குவதற்காக அவ்வாறு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

திருடிய குற்றத்திற்கு, அப்துல் கரீமுக்கு 7 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

முகக்கவசத்தைச் சரியாக அணியாததற்கு, அவருக்கு 6 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையோ 10,000 வெள்ளி வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.

Top