Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உரிமம் இல்லாமல் 450 கிலோகிராமுக்கும் அதிகமான கொத்தமல்லியை இறக்குமதி செய்தவருக்கு அபராதம்

சிங்கப்பூருக்குள் சுமார் 450 கிலோகிராம் கொத்தமல்லியை உரிய உரிமமின்றி இறக்குமதி செய்த ஆடவருக்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
உரிமம் இல்லாமல் 450 கிலோகிராமுக்கும் அதிகமான கொத்தமல்லியை இறக்குமதி செய்தவருக்கு அபராதம்

படம்: Restyledliving/Pixabay

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சிங்கப்பூருக்குள் சுமார் 450 கிலோகிராம் கொத்தமல்லியை உரிய உரிமமின்றி இறக்குமதி செய்த ஆடவருக்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விதிகளுக்குப் புறம்பாக காய்கறிகளை விற்பனைக்கு இறக்குமதி செய்ததற்காக 47 வயது கோ சீ வீயின்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி சிங்கப்பூர் உணவு ஆணைய அதிகாரிகள் பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்தில் நடத்திய சோதனையில் கனரக வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த கொத்தமல்லி கண்டுபிடிக்கப்பட்டது.

மற்ற காய்கறிகளை இறக்குமதி செய்ய கோ விடம் உரிமம் இருந்த போதிலும் கொத்தமல்லி இறக்குமதி செய்ய அவர் உரிமம் பெறவில்லை.

பறிமுதல் செய்யப்பட்ட கொத்தமல்லி நான்கு நாள்களுக்குப் பிறகு அழிக்கப்பட்டன.

கோவிற்கு 10,000 வெள்ளி அபராதமோ மூவாண்டு வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்க சட்டத்தில் இடமுண்டு. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்