Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூரோங் வெஸ்ட்டில் 2.4 கிலோகிராம் கஞ்சாவுடன் சிக்கிய ஆடவருக்குச் சிறை

ஜூரோங் வெஸ்ட்டில் 2.4 கிலோகிராம் கஞ்சாவுடன் சிக்கிய ஆடவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஜூரோங் வெஸ்ட்டில் 2.4 கிலோகிராம் கஞ்சாவுடன் சிக்கிய ஆடவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முகமது ஹைக்கல் முகமதன் என்னும் அந்த 31 வயது ஆடவர் முக்குளிப்பாளராகப் பணியாற்றி வந்தார்.

தமது பணியால் ஏற்படும் முதுகு வலிக்காக் கஞ்சாவைப் புகைத்து வந்ததாக அவர் கூறினார்.

ஆடவருக்குக் குற்றச்செயலில் துணையாக ஷாருக்கான் என்பவர் இருந்தார். அவர் கஞ்சா விற்பவர்.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஹைக்கல் ஷாருக்கானிடம் கஞ்சா வாங்கியுள்ளார்.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷாருக்கானை ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 81-இல் உள்ள புளோக் 854A-வில் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

ஹைக்கலை சந்தித்துச் சில கிராம் கஞ்சாவைக் கொடுத்துவிட்டு வரும்போது ஷாருக்கான் அதிகாரிகளிடம் சிக்கினார்.

அதிகாரிகள் தம்மை நோக்கி வருவதை அறிந்த ஹைக்கல் சன்னல் வழி கஞ்சாவை வெளியே வீசினார்.

அதே நாளில் ஹைக்கலை அதிகாரிகள் கைது செய்து அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

ஹைக்கலின் வீட்டில் சுமார் 2.4 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் பிறகு விசாரணை நடத்தப்பட்டு இப்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான் செய்த குற்றங்களுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

-CNA/ll(rw)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்