Images
  • overstay
    படம்: ICA

விசா கெடு முடிந்து சிங்கப்பூரில் தங்க உதவிய ஆடவருக்குச் சிறை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

விசா கெடு முடிந்த பிறகு ஒருவருக்கு சிங்கப்பூரில் தங்க உதவியது உள்பட பல்வேறு குற்றங்களைப் புரிந்த ஆடவருக்கு 22 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு 2,700 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

டெனிஸ் ஓங் (Denis Ong) எனும் 34 வயது ஆடவர் டாக்சி கட்டணம் செலுத்தாததோடு 72 வயது டாக்சி ஓட்டுநரை அடித்திருக்கிறார்.

டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய சம்பவம் கடந்த மார்ச் மாதம் அதிகாலையில் நடந்தது.

ஓட்டுநருக்கு 27 வெள்ளியைக் கொடுக்காமல் தகராறு செய்துள்ளார் அந்த ஆடவர். அதன் பின்னர் ஓட்டுநரைத் தாக்கியிருக்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் ஓங் விசா கெடு முடிந்த ஆடவருக்குத் தங்க இடம் கொடுத்துள்ளார். அது குடிநுழைவுக் குற்றங்களில் அடங்கும்.

ஓங் மீது 6 குற்றங்கள் சுமத்தப்பட்டன. 4 குற்றங்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.


Top