Images
  • crime
    (படம்: Today)

மனைவியைக் கத்தியால் குத்திய ஆடவருக்கு 10 ஆண்டுச் சிறை

மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற ஆடவருக்கு 10 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது மனைவி மற்றோர் ஆடவருடன் வெளியே சென்றதாகச் சந்தேகித்த முகமது ஜோனிட் அட்னான், அவரைத் தாக்கினார். மனைவியின் யீஷூன் இல்லத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

மறுநாள் மனைவி மருத்துவமனையில் மாண்டார். கத்திக் குத்துச் சம்பவத்திற்கு முன், அவர் மணவிலக்கிற்கு விண்ணப்பித்திருந்தார்.

கணவருக்கு எதிராக தனிப்பட்ட பாதுகாப்பு ஆணைக்கும் அவர் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு ஆயுள் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்பட்டிருக்கக் கூடும்.


Top