Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பெண்மீது வேனைக் கொண்டு 3 முறை மோதிய ஓட்டுநருக்குச் சிறை

பெண் மீது வேனைக் கொண்டு வேண்டுமென்றே 3 முறை மோதிய ஓட்டுநருக்கு ஓரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

பெண் மீது வேனைக் கொண்டு வேண்டுமென்றே 3 முறை மோதிய ஓட்டுநருக்கு ஓரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் ஓராண்டு வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மஸ்லான் உஜோட் என்னும் அந்த 46 வயது ஆடவர் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி ஜூரரோங் வெஸ்ட் வட்டாரத்தில் வேனை சாலையின் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடத்தில் நிறுத்தாமல் சென்றுள்ளார்.

அதைக் கண்ட பெண் ஒருவர் வேனைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

வாகனம் நிறுத்துமிடத்தில் அந்தப் பெண் ஆடவர் செய்த தவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார்

பின்பு அது வாக்குவாதமாக மாறியது.
காவல்துறையினருக்கு அந்தப் பெண் தகவல் கொடுத்தார்.

அந்த இடத்திலிருந்து ஓட்டுநர் தப்பிக்க முயன்றார், அப்போது அவர் வேண்டுமென்றே அப்பெண்ணின்மீது 3 முறை வேனைக் கொண்டு மோதியுள்ளார்.

வேனை நிறுத்துமாறு கூறியும் அதை ஓட்டுநர் கேட்கவில்லை.

வேன் மோதியதால் பெண்ணிற்குக் காயம் ஏற்பட்டது. சில நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மஸ்லான் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டது.

மற்றவர்களிடம் மோசமாக நடந்துகொண்டு காயம் ஏற்படுத்துபவர்களுக்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் 5,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

- CNA/ll(zl) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்