Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விசா காலம் முடிந்தும் சிங்கப்பூரில் தங்கிய ஆடவருக்கு சிறை, பிரம்படி

சிங்கப்பூரில் வேலை அனுமதி அட்டையின் கீழ் பணியாற்றி வந்த மலேசிய ஆடவர், தமது விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாய் தங்கியிருந்ததற்காக இன்று தண்டனை விதிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
விசா காலம் முடிந்தும் சிங்கப்பூரில் தங்கிய ஆடவருக்கு சிறை, பிரம்படி

கோப்புப் படம்: TODAY

சிங்கப்பூரில் வேலை அனுமதி அட்டையின் கீழ் பணியாற்றி வந்த மலேசிய ஆடவர், தமது விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாய் தங்கியிருந்ததற்காக இன்று தண்டனை விதிக்கப்பட்டது.

வேலையிழந்த பிறகு தன்னுடைய அன்றாடத் தேவைகளுக்காக அவர் திருட்டுக் குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

சாங் யின் என்ற 26 வயதுஆடவர் மீது திருட்டு, மோசடி உட்பட 8 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவருக்கு 2 மாதம் 7 வாரச் சிறைத் தண்டனையும், 3 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.

ஆடவரின் விசா காலம் கடந்த ஜனவரி 14ஆம் தேதி முடிவடைந்தது.

பிறகு அவர் இங்கு தங்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் ஆடவர் தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியுள்ளார்.

சைக்கிள்களைத் திருடி இணையத்தில் விற்பது, கைத்தொலைபேசி, ரொக்கம், கடன் அட்டை ஆகியவற்றை திருடிப் பயன்படுத்துவது போன்ற குற்றச்செயல்களிலும் ஆடவர் ஈடுபட்டுள்ளார்.

ஆடவர் ஜூலை 22ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அனுமதி இல்லாமல் 190 நாள்கள் அவர் சிங்கப்பூரில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக இங்கு தங்கியிருந்தால் 6 மாதம் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது 3 பிரம்படியும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

பிரம்படி இல்லையென்றால் 6,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வகையுண்டு.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்