Images
  • handcuffed
    படம்: Jeremy Long

குடிநுழைவுக் குற்றவாளிகளைப் பணியமர்த்திய ஆடவருக்கு 12 மாதச் சிறை

குடிநுழைவுக் குற்றவாளிகளை வேலைக்குச் சேர்த்த 46 வயது உத்திராபதி சரவணன் என்பவருக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டைச் சேர்ந்த அந்த ஆடவர், சிங்கப்பூர் நிரந்தரவாசியும் ஆவார்.

அவர் இலங்கை ஆடவர்கள் நால்வரை வெவ்வேறு உணவகங்களில் பாத்திரம் கழுவும் வேலைக்குச் சேர்த்தார். அந்த நால்வரும் குடிநுழைவுக் குற்றவாளிகள்.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாத்திலிருந்து 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் அவர்கள் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆடவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்து அதிகாரிகள் உத்திராபதியை அடையாளங்கண்டனர். அவர் 2015ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி கைதுசெய்யப்பட்டார்.

அவர் மீதான விசாரணை 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இவ்வாண்டு ஜூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது.

Top