Images
  • mrt
    (படம்:  AFP)

ரயில் நடைமேடைக் கதவை உதைத்து உடைத்த 19 வயது ஆடவர்

ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தின் நடைமேடைக் கதவை உதைத்து, உடைத்த குற்றத்தை 19 வயது ஆடவர் ஒப்புக்கொண்டார்.

சம்பவம் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி நடந்தது.

முகமது அதிப் அஸ்ஃபர் முகமது (Mohamad Adib Azfar Mohamad) வேலை முடிந்தபின் சக ஊழியர்களோடு காலை 6 மணியளவில் ஆர்ச்சர்ட் ரயில் நிலைத்திற்குச் சென்றார்.

ரயிலுக்குக் காத்திருக்கும் நேரத்தில் அதிப் உட்பட அனைவரும் ரயில் நடைமேடையில் ஒருவரையொருவர் தள்ளி விளையாடிக்கொண்டிருந்தனர்.

ரயில் வந்தபிறகு ரயிலுக்குள் நுழைய முயன்ற ஒருவரை அதிப் தடுக்க முயன்றார்.

இருப்பினும் அந்த நபர் ரயிலுக்குள் நுழைந்துவிட்டார்.

கதவுகள் மூடி, ரயில் நகர ஆரம்பித்தபின் அதிப் தம் நண்பர்களைப் பின்தொடர்ந்து ஓடினார்.

அவர்கள் இருந்த பகுதியில் தம் வலது காலால் ரயில் நடைமேடைக் கதவை வேகமாக உதைத்தார்.

கதவு உடைந்து சிதறியது.

அதிப்புக்கு அடுத்த மாதம் (ஜூலை) 17ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 500 வெள்ளி அபராதமோ 2 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.


 

Top