Images
  • gavel
    ( படம்: AFP )

பாலியல் பலாத்காரம் செய்வதைப் படம்பிடித்த ஆடவருக்குச் சிறை, அபராதம்

பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதைப் படம்பிடித்த ஆடவருக்கு ஓர் ஆண்டு 3 மாதச் சிறைத்தண்டனையும் 20,800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் அபராதம் செலுத்தத் தவறினால் அவருக்குக் கூடுதலாக 94 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கான் சூன் சாய் (Gan Soon Chai) என்னும் 34 வயது மலேசிய ஆடவர், 24 வயதுப் பெண் ஒருவரைத் தமது வேலையிட நண்பர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்தபோது படம்பிடித்துள்ளார்.

சம்பவம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் D'Resort@Downtown
East-இல் நடந்தது.

ஆபாசப் படங்களை எடுத்த குற்றத்திற்காக அந்த ஆடவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் 40,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

 

Top