Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடலுறவுக்கு மறுப்புத் தெரிவித்த மனைவியைத் தாக்கியவருக்குச் சிறை

உடலுறவுக்கு மறுப்புத் தெரிவித்த மனைவியைப் படுக்கையில் வைத்து அவர் அடித்துக் காயப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. 

வாசிப்புநேரம் -

உடலுறவுக்கு மறுப்புத் தெரிவித்த மனைவியைத் தாக்கிய 32 வயது ஆடவருக்கு இரண்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தபோது மனைவியிடம் கணவருக்கு எதிராகத் தனிநபர் பாதுகாப்பு உத்தரவு இருந்தது.

2017ஆம் ஆண்டில் கெல்வின் கொக் சொங் மெங்கிற்கு எதிராக (Calvin Kok Chong Meng) அவரின் மனைவி, பாதுகாப்பு உத்தரவைப் பெற்றிருந்தார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், மதுபானம் அருந்திவிட்டு இரவு வீடு திரும்பியவர் மனைவியிடம் தகாத முறையில் நடந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

உடலுறவுக்கு மறுப்புத் தெரிவித்த மனைவியைப் படுக்கையில் வைத்து அவர் அடித்துக் காயப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதே நாள் மருத்துவரைப் பார்த்த மனைவி பின்னர் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.

தனிநபர் பாதுகாப்பு உத்தரவை மீறியதற்காக ஆறு மாதம் வரை சிறை,
$2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்