Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரயிலில் முகக்கவசம் அணியாத ஆடவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு

முகக்கவசம் அணியாமல் MRT ரயிலில் சென்றதாகக் கூறப்படும் ஆடவர் மீது தற்போது புதிய குற்றச்சாட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

முகக்கவசம் அணியாமல் MRT ரயிலில் சென்றதாகக் கூறப்படும் ஆடவர் மீது தற்போது புதிய குற்றச்சாட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு நீதிமன்றத்திற்கு வெளியே முகக்கவசம் அணியத் தவறியதாக அவர் மீது நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டப்பட்டது.

பிரிட்டனைச் சேர்ந்த 40 வயது பென்ஜமின் கிலின் (Benjamin Glynn) ஜூலை 2ஆம் தேதி விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார்.

ஆடவர் காலை 10 மணிக்கும் பத்தரை மணிக்கும்
இடையே நீதிமன்ற வளாகத்திலும் அதற்கு வெளியிலும் முகக்கவசம் அணியாமல் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பொது இடத்தில் தொல்லை விளைவித்தது, தகுந்த காரணமின்றி முகக்கவசம் அணியத் தவறியது, அரசாங்க அதிகாரியை மிரட்டியது என கிலின் மீது ஏற்கெனவே சில குற்றச்சாட்டுகள் உள்ளன.

கிலினுக்கு வழங்கப்பட்ட பிணை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது, அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும் போது ஆடவர் முகக்கவசத்தைச் சரியாக அணியவில்லை. சரியாக அணியுமாறு நீதிபதி இரண்டு முறை நினைவூட்டினார்.

வழக்கு விசாரணை நாளை மறுநாள் தொடரும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்