Images
  • toh  guan
    (படம்:TODAY)

தோ குவான் கட்டடத் தீச்சம்பவம் : மேல் தகடுகளை விற்ற நிறுவனம் மீது மோசடிக் குற்றச்சாட்டு

தோ குவான் ரோட்டில் உள்ள கட்டடத்தின் மேல் தகடுகளை வழங்கிய நிறுவனத்தின் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

தீப்பற்றிய கட்டடத்துக்கான மேல் தகடுகளை வழங்கிய
Chip Soon Aluminium நிறுவனம் மூன்று வாடிக்கையாளர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நிறுவனத்தின் மேல்தகடுகளின் தீப்பாதுகாப்புக்கான சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

அதைத் தொடர்ந்து ஜூனுக்கும் ஜூலைக்கும் இடையில் மேல் தகடுகள் பிற நிறுவனங்களிடம் விற்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

நிறுவனத்தின் விற்பனை, விளம்பர நிர்வாகி பெனி புவா சியா பிங் மீதும் அதேபோன்ற குற்றச்சாட்டுகள் பதிவாகின.

40 வயது புவா மோசடிக் குற்றச்செயல்களுக்கு உடன்போனதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

2014ஆம் ஆண்டு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உரிய தீப்பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாத 259 மேல் தகடுகளை தோ குவான் ரோட்டில் உள்ள CIT கட்டடத்திற்காக விநியோகித்த குற்றச்சாட்டும் அவர்மீது சுமத்தப்பட்டது.

மோசடி அல்லது மோசடிச் செயல்களுக்கு உடன்போனதாக நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுவரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

கண்மூடித்தனமான செயலால் ஒருவரின் உயிருக்கு ஆபத்து விளைவித்தது நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையும் 2,500 வெள்ளிவரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.



Top