Images
  • Manavar muzhakkam 2
    (படம்: தமிழர் பேரவை)

அனைத்துலக மாணவர் முழக்கம் நிகழ்ச்சி சிங்கப்பூரில்

வணக்கம் மலேசியா, அஸ்ட்ரோ வானவில் இரண்டும், சிங்கப்பூர் தமிழர் பேரவையுடன் இணைந்து "அனைத்துலக மாணவர் முழக்கம்" எனும் நிகழ்ச்சியைச் சிங்கப்பூரில் படைக்கவிருக்கின்றன.

அதன் தொடர்பில் இன்று MDIS விரிவுரை அரங்கில் சிங்கப்பூர் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட தகுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது.

அதில் மொத்தம் 25 தொடக்கப்பள்ளி மாணவர்கள் திறன்காட்டினர்.

அவர்களில் சிறப்பாகச் செய்த நான்கு மாணவர்கள் இறுதிப்போட்டியில் கலந்துகொள்வர்.


"அனைத்துலக மாணவர் முழக்கம்" இறுதிப்போட்டி அடுத்த மாதம் முதல் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறும்.

அதில் சிங்கப்பூர் மாணவர்களுடன் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தகுதிச்சுற்றுகளில் சிறப்பாகச் செய்த தொடக்கப்பள்ளி மாணவர்களும் கலந்துகொள்வர்.  

Top