Images
  • mandai bike accident (1)

மண்டாய் ரோட்டில் மோட்டார் சைக்கிள் விபத்து

மண்டாய் ரோட்டில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

Roads.sg Facebook பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், சாலையில் வாகனங்கள் நேரே சென்றுகொண்டிருக்க எதிர்த்திசையிலிருந்து வலப்பக்கம் திரும்ப முயன்றார் மோட்டார்சைக்கிளோட்டி.

அப்போது, சாலையில் செல்லும் லாரிக்குப் பின்னால் கார் சென்றுகொண்டிருப்பது அவருக்குத் தெரியவில்லை.


மோட்டார்சைக்கிள் காருடன் மோத ஓட்டுநரின் தலைக் கவசம் கழன்று தனியாகப் பறப்பது தெரிகிறது.

நேற்று (டிசம்பர் 7) மாலை சுமார் 6 மணி அளவில் ஏற்பட்டது விபத்து.

57 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று காவல்துறை செய்தியிடம் தெரிவித்தது.

Top