Images
  • ballroom
    படம்: Meritus Hotels and Resorts

Mandarin Orchard Singapore ஹோட்டலின் முக்கிய விருந்துக் கூடத்தில் சேவைகள் தற்காலிக நிறுத்தம்

Mandarin Orchard Singapore ஹோட்டலின் முக்கிய விருந்துக் கூடத்தில் வழங்கப்படும் விருந்துணவுச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் அனுமதிக்கும் வரை அது திறக்கப்பட மாட்டாது என்று அந்த ஹோட்டல் சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்தது.

ஹோட்டலில் ஞாயிறன்று ஏற்பட்ட நச்சுணவுச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் 42 பேர் நோய்வாய்ப்பட்டனர். அவர்களில் நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Grand Mandarin Ballroom விருந்துக் கூடத்தில் ஞாயிறு மாலை நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியிலும் நச்சுணவுச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

500 பேர் கலந்துகொண்ட இரவு விருந்துக்குப் பிறகு தாம் கடுமையாக நோய்வாய்ப்பட்டதாக சேனல் நியூஸ்ஏஷியா வாசகர் ஒருவர் தெரிவித்தார்.

சுமார் 12 பேர் நோய்வாய்ப்பட்டது தமக்குத் தெரியும் என்றும் குறைந்தது இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அந்த இருவரும் மூத்த குடிமக்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 


Top