Images
  • plane (1)
    (படம்: AFP/Miguel Medina)

மங்கூட் சூறாவளியால் சிங்கப்பூரில் விமானச் சேவைகள் பாதிப்பு

மங்கூட் சூறாவளியால் சிங்கப்பூரில் குறைந்தது ஐந்து அனைத்துலக விமானச்சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நேற்று 12 சேவைகளை ரத்துசெய்தது. அவை சிங்கப்பூருக்கும் ஹாங்காங், சான் ஃபிரான்ஸில்கோ ஆகியவற்றுக்கிடையில் சேவைகளை வழங்கவிருந்தன.

மலேசியாவும் ஆறு சேவைகளை ரத்துசெய்துள்ளது. அவை மலேசியாவிலிருந்து ஹாங்காங்கிற்கும் ஹாங்காங்கிலிருந்து மலேசியாவுக்கும் சேவைகளை வழங்கவிருந்தன.
பிலிப்பீன்ஸும் 12 உள்ளூர் வெளியூர் சேவைகளை ரத்துசெய்துள்ளது.  

Top