Images
  • employment labour
    (படம்: AFP/Roslan RAHMAN)

10இல் 6 நிறுவனங்களுக்கு ஊழியர்களைப் பணியமர்த்துவதில் சிரமம்

சிங்கப்பூரில் 10இல் 6 நிறுவனங்கள் ஊழியர்களைப் பணியமர்த்துவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.

அவற்றில் கிட்டத்தட்ட பாதி தளவாடம், செயல்பாடு தொடர்பான வேலைகள்.

உலக அளவில் திறனாளர் பற்றாக்குறை 15 ஆண்டுகள் இல்லாத அளவு அதிகரித்திருப்பதாக ManpowerGroup வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

நோய்த்தொற்றுக்கு முன்பைக் காட்டிலும் பணியமர்த்தப்படாத பொறுப்புகள் ஒரு மடங்கு அதிகரித்திருப்பதாக நிறுவனங்கள் கூறியுள்ளன.

எல்லைகள் மூடப்பட்டிருப்பதும் அதற்கு ஒரு காரணம்.

மனிதவளத் தேவையைக் குறைக்க தற்போது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறிப்பாக செயல்பாடுகள், தளவாடம் தொடர்பான பொறுப்புகளில் ஊழியர்களை அமர்த்துவது ஆகக் கடினமாக உள்ளது.

ManpowerGroup நிறுவனம் நடத்திய ஆய்வில்
கலந்துகொண்ட சுமார் 600 நிறுவனங்கள் அவ்வாறு கூறியுள்ளன.

விற்பனை, விளம்பரம், உற்பத்தி உள்ளிட்டவை மற்ற துறைகளில் அடங்கும்.

இன்றைய ஊழியர்கள் நல்ல சம்பளத்தைவிட நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளையும், கற்றல் வாய்ப்புகளையும் எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். 

Top