Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'மீன் வர்த்தகத் துறைமுகத்திலும் ஈரச்சந்தைகளிலும் கிருமிப்பரவல் ஏற்பட்டதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்'

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத்திலும் ஈரச்சந்தைகளிலும் ஏற்பட்ட கிருமிப்பரவலுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் எனச் சுகாதார அமைச்சின்  சுகாதாரச் சேவைகளுக்கான இயக்குநர் கென்னத் மாக் குறிப்பிட்டுள்ளார். 

வாசிப்புநேரம் -
'மீன் வர்த்தகத் துறைமுகத்திலும் ஈரச்சந்தைகளிலும் கிருமிப்பரவல் ஏற்பட்டதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்'

கோப்புப்படம்: AFP/Roslan Rahman

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத்திலும் ஈரச்சந்தைகளிலும் ஏற்பட்ட கிருமிப்பரவலுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் எனச் சுகாதார அமைச்சின் சுகாதாரச் சேவைகளுக்கான இயக்குநர் கென்னத் மாக் குறிப்பிட்டுள்ளார்.

வெவ்வேறு சம்பவங்களில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கிருமிவகைகள் பற்றிய மரபணுத் தகவல், முற்றிலும் ஒரே மாதிரியாக இல்லை என்றும் அவர் சொன்னார்.

ஆதலால், கிருமித்தொற்று எவ்வளவு காலமாக இடம்பெற்றுள்ளது என்பதைக் கண்டறிவது சாத்தியம் அல்ல என்றும் இணைப் பேராசிரியர் மாக் விளக்கினார்.

கிருமித்தொற்று எவ்வாறு பரவியது என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க, கிருமித்தொற்றுக் குழுமங்களில் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பதையும் அவர் சுட்டினார்.

வெளிநாடுகளிலும், அதே போல் ஈரச்சந்தைகளில் கிருமிப்பரவல் நேர்ந்துள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

அத்தகைய இடங்களில் பாதுகாப்பு விதிகள், வழக்கமான கிருமித்தொற்றுப் பரிசோதனை ஆகியவற்றுக்கான தேவை மறுஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்