Images
  • causeway
    (படம்: AFP)

மார்ச் மாதப் பள்ளி விடுமுறைக் காலத்தின்போது சோதனைச் சாவடிகளில் நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


மார்ச் மாதப் பள்ளி விடுமுறைக் காலத்தின்போது துவாஸ், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 15ஆம் தேதி முதல், 24ஆம் தேதி வரை வார இறுதி நாள்களில் அங்கு நெரிசல் அதிகமாக இருக்கும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கூறியது.

தாமதங்களைக் கருத்தில்கொண்டு பயணத் திட்டங்களை அவற்றுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளும்படிப் பயணிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.

பட்டாசு போன்ற தடை விதிக்கப்பட்ட பொருள்களை எடுத்துச் செல்லவேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் பாதுகாப்பான முறையில் வாகனங்களைச் செலுத்துமாறும் ஆணையம் அறிவுரை கூறுகிறது.

சோதனைச் சாவடிகளில் போக்குவரத்தின் நிலைமை குறித்த
மேல்விவரங்கள் ஆணையத்தின் Facebook பக்கத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும்.  

Top